சூரி ஹீரோவாக நடிக்கும் கொட்டுக்காளி படத்தின் ஷுட்டிங் அப்டேட்!
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் ஏற்கனவே நான்கு படங்கள் தயாரித்து உள்ள நிலையில் தற்போது ஐந்தாவது படமாக சூரி நடிக்கும் கொட்டுக்காளி என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை கூழாங்கல் படத்தின் இயக்குனர் வினோத் ராஜ் இயக்குகிறார். சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான எஸ்.கே. ப்ரொடெக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் சூரி நாயகனாக நடிக்க உள்ளார் என்பதும் மலையாள நடிகை அன்னாபென் நாயகியாக நடிக்க உள்ளார் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து விரைவில் ரிலீஸ் பணிகள் தொடங்க உள்ளதாக தெரிகிறது.