1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 4 ஜனவரி 2018 (00:41 IST)

விஷால் படத்தின் இசையை வாங்கிய பிரபல ஆடியோ நிறுவனம்

விஷால் நடித்துவரும் ‘சண்டக்கோழி 2’ படத்தின் ஆடியோவை, சோனி மியூஸிக் நிறுவனம் வாங்கியுள்ளது. லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்துவரும் படம் ‘சண்டக்கோழி 2’. ஏற்கெனவே ரிலீஸான ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகமாக இது தயாராகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண், சூரி, ‘ஜிமிக்கி கம்மல்’ அப்பாணி சரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
 
இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி தயாரித்துவரும் இந்தப் படம், தமிழ்ப் புத்தாண்டுக்கு ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தின் டீஸர், மலேசியாவில் நடைபெற இருக்கும் நட்சத்திரக் கலைவிழாவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனமான சோனி வாங்கியுள்ளது.