1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 17 ஜனவரி 2020 (11:38 IST)

மாட்டுப் பெருமை கூறும் பாட்டு வரிகள் - வைரமுத்து டுவீட்

தமிழகத்தில் இன்று காணும் பொங்கள் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி மக்கள் தங்கள் உற்றார் சுற்றங்களையும், நண்பர்களையும் சந்தித்து மகிழ்ச்சி அடையும் உன்னத் திருநாள் ஆகும். இன்று மதுரை அலங்காநல்லூரிலும்  உலகப் புகழ்பெற்ற  ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெற்று வருகிறது. 
இந்நிலையியில்,  இயக்குநர் வெற்றி துரைசாமி இயக்கிவரும் என்றாவது ஒருநாள் என்ற படத்திற்கு  பிரபல தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரான கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்நிலையில் வைரமுத்து இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.
 
அதில், "என்றாவது ஒருநாள்" படத்தில் மாட்டுப் பெருமை கூறும் பாட்டு வரிகள். 
 
"ஈசன் தந்த மாடு ரெண்டும் 
எங்க பிள்ளை ஆச்சு
ரேசன் கார்டு எழுதும்போது
பேரு விட்டுப் போச்சு"
 
இசையமைப்பாளர் என். ஆர்.ரகுநந்தன் மற்றும் இயக்குநர் வெற்றி துரைசாமியுடன்.@vetrid#nrrhnandhan எனப் பதிவிட்டுள்ளார். 

இந்தப் பாடல் நிச்சயமாக தமிழர்களின் வீரத்தையும் அதேசயமம் உழவர்களுக்கு தோள் கொடுத்து விவசாயத்திற்கு உதவும் மாட்டின் பெருமையை கூறும் என தகவல் வெளியாகிறது.