வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 28 நவம்பர் 2014 (14:59 IST)

பொய் சொல்லக் கூடாது - சோனம் பஜ்வா

கப்பல் படத்தில் அறிமுகமாகியிருக்கிறார் சோனம் பஜ்வா. படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பற்றி பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
 
டெல்லியில் மாடலிங்கில் ஈடுபட்டிருந்த போது ஷங்கரின் அலுவலகத்திலிருந்து அவருக்கு ஆடிஷனில் கலந்து கொள்ளச் சொல்லி போன் வந்திருக்கிறது. ஷங்கரின் அலுவலகம் அல்லவா... உடனே கிளம்பி வந்திருக்கிறார். ஒரு தமிழ் டயலாக்கை தந்து நடிக்க சொல்லியிருக்கிறார்கள். சோனம் நடிக்க, உடனே தேர்வு செய்துவிட்டார்கள்.
 
கப்பல் படத்தை இயக்கியது ஷங்கரின் அசிஸ்டெண்ட் கார்த்திக்காக இருந்தாலும் தயாரித்தது வேறு நிறுவனம். படம் முடிந்து ஷங்கருக்கு - குரு என்பதால் படத்தை திரையிட்டு காட்டினார் கார்த்திக். படம் நன்றாக இருந்ததால் கப்பலை தனது பேனரில் வெளியிட முடிவு செய்து விநியோக உரிமையை வாங்கினார் ஷங்கர். படம் முடிந்த பிறகுதான் ஷங்கருக்கும் கப்பல் படத்துக்குமே சம்பந்தம் வருகிறது. அப்படியிருக்க, சோனத்தை ஆடிஷனுக்கு ஷங்கர் அலுவலகம் அழைத்தது என்பது பொய் அல்லவா?
 
அழகான பெண்கள் சொன்னாலும் பொய் பொய்தானே.