வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 31 அக்டோபர் 2018 (21:21 IST)

ஒரு ரூபாய் கூட்டினாலும் வழக்கு போடுவேன்: சர்கார் படத்திற்கு எச்சரிக்கை

'சர்கார்' படத்தின் கதை என்னுடையது என்று உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் போட்ட வழக்கு ஒருவழியாக நேற்று முடிவுக்கு வந்த நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர் 'சர்கார்' படத்தின் டிக்கெட்டை ஒரு ரூபாய் அதிகமாக விற்பனை செய்தாலும் வழக்கு போடுவேன் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.

ரஜினி, கமல், அஜித் , விஜய் போன்ற பெரிய ஹீரோவின் படங்களின் முதல் காட்சியின் டிக்கெட்டுக்கள் ஆயிரம் ரூபாயில் இருந்து இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வரை விற்பனை செய்வதுண்டு. ஆனால் அரசு நிர்ணயித்த விலையை விட ஒரு ரூபாய் அதிகமாக டிக்கெட் விற்பனை செய்தாலோ அல்லது அரசின் அனுமதியின்றி கூடுதல் காட்சிகள் திரையிட்டாலோ வழக்கு போடுவேன் என சமூக ஆர்வலர் தேவராஜ் என்பவர் எச்சரித்துள்ளதால்' சர்கார்' படத்தை திரையிடும் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

ஏற்கனவே இவர் இதேபோன்ற வழக்குகளை நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் அந்த வழக்குகளின் விசாரணை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.