திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : திங்கள், 27 நவம்பர் 2023 (14:13 IST)

அமீர் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை: கவிஞர் சினேகன்

அமீர் நேர்மையை எடை பார்க்கும் தகுதி யாருக்கும் இல்லை என கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களாக அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தின் பிரச்சனை பரபரப்பாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இது குறித்து ஞானவேல் ராஜா அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு அமீர் மற்றும் அவரது தரப்பினர் பதிலடி கொடுத்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் பருத்தி வீரன் படத்தில் பணிபுரிந்த கவிஞர் சினேகன் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது
 
நான் இயக்குனர் அமீரோடு அவரின் முதல் படத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.
 
அவரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி  எவருக்கும் இல்லை.
 
பருத்தி வீரன் படத்தை முடிப்பதற்கு  அவர் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார் என்பது அவரோடு கூட பயணித்த என்னைப் போன்றவர்களுக்கு தான்  தெரியும்.
 
ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்.
 
 
Edited by Mahendran