பக்கத்துல ஒரு பெண் இருந்தா போதும் உடனே கைபோடுவார் போல: சினேகனை கண்டித்த சக்தி!

பக்கத்துல ஒரு பெண் இருந்தா போதும் உடனே கைபோடுவார் போல: சினேகனை கண்டித்த சக்தி!


Caston| Last Updated: சனி, 29 ஜூலை 2017 (11:32 IST)
பிக் பாஸ் வீட்டில் உள்ள சினேகன் பெண்களை அதிகமாக கட்டிப்பிடிக்கிறார். அதிகமாக அவர்களை தொட்டு பேசுகிறார் என மக்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவி வருகிறது. குறிப்பாக நமீதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியபோது மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு அவர் நடந்து கொண்டார்.

 
 
இதனையடுத்து சினேகனை சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கலாய்த்தும் மீம்ஸ்கள் போட்டும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளராக உள்ள சக்தியே சினேகனை கலாய்ப்பது போல கண்டித்துள்ளார்.
 
நேற்று பிக் பாஸ் வீட்டில் உள்ள ஓவொருவரையும் கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்து இந்த வாரம் சிறந்த போட்டியாளராக யாரை நினைக்கிறீர்கள் என கேட்டார். அதற்கு பெரும்பாலானோர் சினேகன் மற்றும் சக்தியை கூறினர்.
 
இதனையடுத்து வெற்றிபெற்ற சினேன் மற்றும் சக்திக்கு பரிசாக ஹேர்கட் செய்வதற்காக ஒரு ஆணையும், ஒரு பெண்ணையும் பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பியிருந்தார் பிக் பாஸ். ஹேர்கட் முடிந்த பின்னர் அவர்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தபோது சினேகன் அந்த பெண்ணின் தோள் மீது தன் கையை வைத்தார்.
 
அதை பார்த்த சக்தி கை எடுப்பா, இதுதான் சாக்குனு மேலே கை போட்டுக்கிட்டு என கூறி சினேகனை கலாய்த்துவிட்டார், ஆனால் அது கலாய்ப்பது போல அவரை கண்டித்தது ஆகும்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :