வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 30 அக்டோபர் 2021 (09:48 IST)

இத்தனை வருஷமா பாட்டு எழுதுனாலும் ரஹ்மானோடு இதுதான் முதல் முறை… சினேகனுக்கு கிடைத்த முதல் வாய்ப்பு!

பாடலாசிரியர் சினேகன் பத்து தல படத்தில் முதல் முதலாக ரஹ்மானுக்கி பாடல் எழுதியுள்ளார்.

நீண்ட காலமாக தனது திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து திரைப்படங்களை நடித்து வருகிறார் சிம்பு. அவரது ஈஸ்வரன் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அடுத்த படமான மாநாடு படத்தை நடித்து முடித்துக் கொடுத்து விட்டு இப்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் தனது அடுத்தப்படமான பத்து தல படத்தில் எப்போது நடிப்பார் என்பது கேள்விக்குறியாகி இருந்தது. சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா இயக்குகிறார். இந்நிலையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவிலில் கிட்டத்தட்ட 50 சதவீதம் நடந்து முடிந்துள்ளது.

படத்துக்காக ரஹ்மான் இதுவரை மூன்று பாடல்களை கம்போஸ் செய்து முடித்துள்ளாராம். அதில் ஒரு பாடலை சினேகன் எழுதியுள்ளார். சினேகன் 20 ஆண்டுக்கும் மேலாக பாடல்கள் எழுதி வந்தாலும், இப்போதுதான் முதல் முறையாக ரஹ்மான் இசையில் பாடல் எழுதுகிறார்.