1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 24 மே 2021 (21:05 IST)

சகோதரர் தினத்தில் சினேகா வெளியிட்ட புகைப்படம் வைரல்!

ஒவ்வொரு ஆண்டும் மே 24ஆம் தேதி சகோதரர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது என்பதும் இன்றும் சகோதரர்கள் தினம் திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் கொண்டாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக திரையுலக பிரபலங்கள் தங்களுடைய சகோதரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது
 
இந்த நிலையில் இன்று நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சகோதரர்கள் தினம் குறித்த ஒரு பதிவு செய்துள்ளார். இந்த பதவியில் அவர் தனது சகோதரர்களாகிய பாலாஜி நாயுடு மற்றும் கோவிந்து நாயுடு ஆகியோர்கள் உடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் தனது சகோதரர்களுடன் உள்ள புகைப்படத்தை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது