1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2016 (11:14 IST)

அறுபது வயது தாத்தாவாக நடிக்கும் சிம்பு

அறுபது வயது தாத்தாவாக நடிக்கும் சிம்பு

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்பு அறுபது வயது தாத்தாவாக நடிக்கவிருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் சிம்பு மூன்றுவித கெட்டப்புகளில் நடிக்கிறார். அதில் ஒன்று தாடி வைத்த கெட்டப். அதன் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியானது.

 
 
 
அறுபது வயது கதாபாத்திரத்தின் யெர் அஸ்வின். கதைப்படி இவர் ஒரு தாதா. இவரது இரு மகன்களாக சிம்புவே நடிக்கிறார். அறுபது வயது தாதாவுக்கு மனைவியாக ஸ்ரேயா சரண் நடிக்கிறார்.
 
அறுபது வயது கதாபாத்திரத்துக்காகத்தான் சிம்பு உடல் எடையை அதிகரித்துள்ளார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. சிம்பு முதன்முறையாக மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தும் வேடம் என்பதால் இதற்காக தன்னை முழமையாக தயார்படுத்தி வரும் சிம்பு, நடை, உடை, பாவணை, குரல் என அனைத்திலும் 60 வயது தாத்தாவாக மாறிவிடுவதால், இது சிம்புவின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கக்கூடிய கேரக்டராக அமையும் என்கிறார்கள்.