1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 12 அக்டோபர் 2022 (15:44 IST)

கம்மி பட்ஜெட்டில் அதிக லாபம்… சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளருக்கு அடித்த ஜாக்பாட்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

சிவகார்த்திகேயன், பிரேம்ஜி அமரன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ் – தெலுங்கில் பிரின்ஸ் திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடந்தது.

படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை மரியா ரியோபாஷாப்கா நடிக்கிறார். தீபாவளிப் பண்டிகை திங்கள் கிழமை வருவதால் இந்த படம் 3 நாட்கள் முன்பாக அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே டாக்டர் மற்றும் டான் படங்களின் மூலம் வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில் இந்த படத்தை 100 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பெரிய அளவில் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர்கள் லாபம் பார்த்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படம் மிகவும் குறைவான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் வியாபாரத்தின் மூலம் ரிலீஸூக்கு முன்பாகவே தயாரிப்பாளருக்கு 40 முதல் 50 கோடி ரூபாய் லாபமாக கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.