வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (19:00 IST)

ஆபாச நடிகருடன் நித்தியானந்தை ஒப்பிடுவதா? யோகிபாபு படத்திற்கு சிவசேனா எதிர்ப்பு!

நடிகர் யோகிபாபு, வருண் நடித்த 'பப்பி' என்ற திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த போஸ்டரில் ஜானிசின்ஸ் என்ற ஆபாச நடிகர் ஒருவர் ஒரு பக்கமும் இன்னொரு பக்கத்தில் நித்தியானந்தாவும் இருந்தவாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டருக்கு சிவசேனாவை சேர்ந்த செல்வம் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்
 
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஆபாச படங்களில் நடித்த ஜான்சின்ஸ் என்பவரையும் இந்துமத பிரச்சாரங்கள், போதனைகளில் ஈடுபட்டு வரும் சுவாமி நித்தியானந்தா அவர்களை இணைத்து திரைமுன்னோட்டம் வெளியிட்டுள்ளதாகவும், இது பெரும்பாலான இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இதற்கு காரணமான படக்குழுவினர் மற்றும் இயக்குனர் முரட்டுசிங்கிள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு சென்னை போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
யோகிபாபு, வருண், சம்யுக்தா ஹெக்டே உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இவர் தயாரித்த 'கோமாளி' திரைப்படமும் சமீபத்தில் ரஜினி காட்சி குறித்த சர்ச்சையில் சிக்கி மீண்ட நிலையில் தற்போது மேலும் ஒரு பிரச்சனையை அவர் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது