1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 23 மார்ச் 2015 (11:30 IST)

காசு கொட்டும் காக்கி சட்டை

படம் சுமார் என்று விமர்சனம் எழுந்தாலும் காக்கி சட்டை போட்ட காசைத் தாண்டி பல கோடிகள் வசூலித்தது. படம் 25 நாள்களை கடந்த நிலையில், தனது படங்களில் அதிக வசூலை பெற்ற படம் என்று நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் சிவ கார்த்திகேயன்.
மான் கராத்தே டீம், இல்லை எங்கள் படம்தான் காக்கி சட்டையைவிட அதிகம் வசூலித்தது என்கிறது. ஆனால், காக்கி சட்டை டீமும் சிவ கார்த்திகேயனும் காக்கி சட்டைதான் த பெஸ்ட் என்கிறார்கள்.
 
உண்மை எதுவாக இருந்தாலும், காக்கி சட்டை காசை அள்ளியது மட்டும் நிஜம். அடுத்து வருகிற ரஜினி முருகன் காக்கி சட்டையை முந்த வேண்டும் என்பதே இப்போது சிவ கார்த்திகேயனின் ஒரே விருப்பமும் முயற்சியும்.
 
அசத்துங்க பாஸ்.