செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 17 செப்டம்பர் 2020 (18:02 IST)

அஸ்வினுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரபல தமிழ் ஹீரோ!

பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு சக கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்துக்களை இன்று காலை முதல் தெரிவித்து வருகின்றனர் 
 
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் அஸ்வினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் தாங்கள் அதிக விக்கெட்டுகளை பெற எனது வாழ்த்துக்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
மேலும் சமீபத்தில் அஸ்வின் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் சுவராசியமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதுகுறித்து கூறிய சிவகார்த்திகேயன் யூடியூபிலும் கலக்குறீங்க அதற்கும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது