1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 4 ஜனவரி 2021 (16:05 IST)

விஜய், சிம்பு இருவரின் படங்கள் குறித்து சிவகார்த்திகேயன் டுவீட்!!

விஜய் ,சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்

வரும் ஜனவரி 13 ஆம் தேதி இப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதாகப் படக்குழு தெரிவித்த நிலையில் நடிகர் விஜய் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று தமிழக அரசு திரையரங்கில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.இதனால் ஒட்டுமொத்த சினிமா துரையினரும், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், மாஸ்டர் படம் குறித்து  விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகும் விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய இரு படங்களும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழ் சினிமா மீண்டும் சிறப்பாக இயங்கிட வழிவகுத்த தமிழக அரசிற்கு நன்றி