வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : திங்கள், 21 மே 2018 (19:20 IST)

சிவகார்த்திகேயனின் திட்டம் என்ன தெரியுமா?

இந்த வருடத்திற்குள் இரண்டு படங்களை ரிலீஸ் செய்துவிட வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளாராம் சிவகார்த்திகேயன்.
 
சிவகார்த்திகேயன் தற்போது ‘சீமராஜா’ படத்தில் நடித்துள்ளார். பொன்ராம் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சமந்தா ஹீரோயினாக நடித்துள்ளார். நெப்போலியன், சூரி, சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றனர்.
 
அடுத்ததாக, எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தை, ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த இரு படங்களையும் இந்த வருடத்திற்குள் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
 
இதுதவிர, ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படம், சயின்ஷ் பிக்‌ஷன் படமாக உருவாக இருக்கிறது.