செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 3 பிப்ரவரி 2020 (18:13 IST)

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் வேற்றுகிரக கதையா? டைட்டில் அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் 14வது படமான படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு ஏஆர் ரஹ்மான் அவர்களால் அறிவிக்கப்படும் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இதன்படி சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் ’அயலான்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த படத்தின் டைட்டில் டிசைனில் இருந்தே இந்த படம் ஒரு வேற்று கிரக மனிதர்கள் குறித்த படம் என்பது தெரிகிறது. குறிப்பாக அயலான் என்ற டைட்டில் உள்ள ‘ஏ’ என்ற எழுத்தில் வேற்று கிரக மனிதனின் தோற்றம் கொண்ட முகம் ஒன்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழில் முழுக்க முழுக்க வேற்றுகிரக மனிதர்களை கொண்ட திரைப்படம் ஒன்று இதுவரை வெளிவரவில்லை என்பதால் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் கேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இவ்வருட இறுதிக்குள் இந்த படம் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது