1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 27 ஜனவரி 2022 (16:51 IST)

சிவகார்த்திகேயனின் ‘டான்’ ரிலீஸ் தேதி இதுவா?

சிவகார்த்திகேயனின் ‘டான்’ ரிலீஸ் தேதி இதுவா?
சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ‘டான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா வைரஸ் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டவுடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி மார்ச் 25ஆம் தேதி ‘டான்’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று கூறப்படுவதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த படத்தில் ஷிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, பாலசரவணன், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தை லைக்கா மற்றும் சிவகார்த்திகேயன் புரோடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.