செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 23 மே 2022 (09:07 IST)

சிவாஜி குடும்பத்தில் இருந்து அடுத்து ஒரு நடிகர்… ராம்குமார் மகன் தர்சன் விரைவில் சினிமாவில்!

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரன்களான விக்ரம் பிரபு, துஷ்யந்த் ஆகியோர் நடிகர்களாக அறிமுகமாகினர்.

தமிழ் சினிமாவின் அடையாளங்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன். அவரின் குடும்பத்தில் இருந்து அவரது மகன்களான ராம்குமார், பிரபு ஆகியோரும் நடிகர்களாக தங்கள் அடையாளத்தைப் பதித்தவர்கள். இதையடுத்து மூன்றாவது தலைமுறையாக ராம்குமார் மற்றும் பிரபுவின் மகன்களான துஷ்யந்த் மற்றும் விக்ரம் பிரபு ஆகியோரும் அறிமுகமாகினர்.

இந்நிலையில் இப்போது மற்றொரு சிவாஜி குடும்ப வாரிசும் திரையுலகில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவாஜியின் மூத்த மகனான ராம்குமாரின் இளையமகனான தர்சன் விரைவில் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் தெருக்கூத்து மற்றும் மேடை நாடகம் ஆகியவற்றில் ஏற்கனவே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.