திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 அக்டோபர் 2022 (12:02 IST)

சொத்து பிரச்சனை: சிவாஜி கணேசன் மகள்கள் மனு தள்ளுபடி!

sivaji family
சொத்து பிரச்சனை: சிவாஜி கணேசன் மகள்கள் மனு தள்ளுபடி!
சொத்து பிரச்சனை தொடர்பாக சிவாஜி கணேசனின் மகள்கள்: சிவாஜி கணேசனின் மகன்கள் மீது பதிவு செய்த வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சொந்தமான சாந்தி தியேட்டர் விற்பனை தொடர்பாக பிரபு மற்றும் ராம் குமார் ஆகியோருக்கு எதிராக சிவாஜி கணேசன் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் 
 
இந்த வழக்கில் சாந்தி தியேட்டர் சொத்துக்களில் தங்களுக்கு பங்கு கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக பிரபு மற்றும் ராம்குமார் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Mahendran