வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 27 செப்டம்பர் 2018 (17:02 IST)

கடவுள்னா அவர்தான் கடவுள் : அஜீத்தை பாராட்டும் பாட்டி (வீடியோ)

நடிகர் அஜீத்தை கடவுள் ரேஞ்சிக்கு பாராட்டி விஸ்வாசம் படத்தில் நடித்து வரும் பாட்டி பாராட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

 
பொதுவாகவே நடிகர் என்பதை தாண்டி, நடிகர் அஜீத்தை அவரின் குணம் மற்றும் நடத்தைக்காக பலரும் பாராட்டி வருவது பல வருடங்களாக நடந்து வருகிறது.
 
தல மிகவும் எளிமையானவர், பந்தா காட்டா மாட்டார். படப்பிடிப்பு தளத்தில் எல்லோருடன் சகஜமாக பேசுவார் என பல நடிகர்கள் அவரை பாராட்டி வருவது வழக்கமான ஒன்று.
 
இந்நிலையில், அஜீத் நடித்து வரும் விஸ்வாசம் படத்தில் சிட்டுக்குருவி என்கிற வேடத்தில் அவருடன் நடித்து வரும் ஒரு மூதாட்டி அஜீத்தை பாராட்டி பேசும் வீடியோ வைரலாகியுள்ளது.

தல தங்கமானவர். கேரவானுக்கு செல்ல மாட்டார். எங்களுடன் அமர்ந்து பேசுவார். எங்களுடன்தான் சாப்பிடுவார். கடவுள்னா அவருதான் கடவுள் என அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார். இதை அஜீத் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.