ஒற்றைப் பாட்டுக்கு இரண்டரை கோடி செலவு செய்த தனுஷ்


cauveri manickam| Last Modified வியாழன், 13 ஜூலை 2017 (16:54 IST)
விஐபி 2’ படத்தில் இடம்பெற்றுள்ள தனுஷின் ஓப்பனிங் பாடலுக்காக, இரண்டரை கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர்.
 
 


செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘விஐபி 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், அமலா பால், கஜோல், சமுத்திரக்கனி, விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, தனுஷுடன் சேர்ந்து தயாரித்துள்ளார் கலைப்புலி எஸ். தாணு. பிரமாண்ட தயாரிப்பாளர் என்று பெயரெடுத்த தாணு, ‘தெறி’, ‘கபாலி’ படங்களைத் தொடர்ந்து தயாரிக்கும் படம் இது.

இந்தப் படத்தில் தனுஷின் ஓப்பனிங் பாட்டுக்கு மட்டும் இரண்டரை கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு மிகப்பெரிய பில்டிங், 150 கார்கள் என மிகப்பிரமாண்டமாக இந்தப் பாடல் படம்பிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சண்டைக் காட்சி போல கயிற்றில் தொங்கியபடியெல்லாம் நடனம் அமைத்துள்ளனர். தென்னிந்தியாவிலேயே இப்படி நடனம் அமைத்துள்ளது இதுதான் முதன்முறை என்கிறார்கள்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :