பாடகி வைக்கம் விஜயலட்சுமி கண் பார்வையில் முன்னேற்றம்...

Sasikala| Last Modified வெள்ளி, 13 ஜனவரி 2017 (16:13 IST)
பிருத்விராஜ் நடிப்பில் கமல் இயக்கிய செலுலாயிட் திரைப்படத்தில் காற்றே காற்றே பாடலை பாடி பிரபலமானவர் வைக்கம்  விஜயலட்சுமி. தற்போது தென்னிந்திய மொழி திரைப்படங்கள் அனைத்திலும் பாடி வருகிறார். தெறியில் இடம்பெற்ற என் ஜீவன் பாடலை பாடியதும் இவர்தான்.

 
வைக்கம் விஜயலட்சுமி கண் பார்வை இல்லாதவர். தற்போது அவர் மேற்கொண்டுவரும் தொடர் சிகிச்சையில்  வெளிச்சத்தையும், நிழலுருவங்களையும் அவரால் பார்க்க முடிவதாக மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  விரைவில் அவர் முழுப் பார்வையை பெற வாய்ப்புள்ளதாகவும் அந்த செய்திகள் கூறுகின்றன.
 
வைக்கம் விஜயலட்சுமிக்கு வரும் மார்ச்சில் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :