வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 6 ஜனவரி 2017 (14:10 IST)

பாவம்... பாவம்.. பார்த்திபன்

பல வருடங்களுக்குப் பிறகு கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற படத்தை இயக்கினார் பார்த்திபன். டிசம்பர் மாதம் 23 -ஆம் தேதி  படத்தை வெளியிடுவதாக இருந்தார். வேறு படங்கள் குவிந்ததால் டிசம்பர் 30 -க்கு படவெளியீட்டை மாற்றினார்.



பொங்கலுக்கு படத்தை வெளியிட்டால் விடுமுறை தினத்தில் அதிகம்பேர் பார்க்க வாய்ப்பிருக்கிறது என்று ஜனவரி 12 -ஆம் தேதிக்கு  வெளியீட்டை மாற்றினார். அன்றுதான் விஜய்யின் பைரவாவும் வெளியாகிறது.
 
திரையரங்கு உரிமையாளர்கள் பைரவாவுக்கு முன்னுரிமை பின்னுரிமை உள்பட எல்லா உரிமைகளும் கொடுப்பதால், கோடிட்ட  இடங்களை நிரப்புக படத்துக்கு தேவையான அளவு திரையரங்குகள் கிடைக்கவில்லை. அதனால் ஜனவரி 14 -ஆம் தேதிக்கு  வெளியீட்டை மீண்டும் தள்ளி வைத்துள்ளார்.
 
இந்த தேதியிலும் திரையரங்குகள் கிடைக்கவில்லை என்றால், பிப்ரவரி மாதத்துக்கு படவெளியீட்டை தள்ளி வைப்பதை தவிர  வேறு வழியில்லை என கூறியுள்ளார். அவர் பேசுவதைப் பார்த்தால் கோடிட்ட இடங்களை நிரப்புக பிப்ரவரியில்தான் வரும் போலிருக்கிறது.