வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (07:34 IST)

கைதிக்கும் தலைவர் 171 படத்துக்கும் இடையில் உள்ள ஒற்றுமை இதுதான்? லோகேஷின் ஹிட் பார்முலா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.இப்போது திரைக்கதை பணிகளில் ஈடுபட்டு வரும் லோகேஷ், இந்த படத்துக்கான நடிகர் நடிகைகள் தேர்வையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்தை இளமையாகக் காட்ட டி ஏஜிங் தொழில்நுட்பத்தை இயக்குனர் லோகேஷ் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் ரிலீஸ் ஆன நிலையில் படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தைப் பற்றிய மற்றொரு தகவல் பரவி வருகிறது. அதன்படி ரஜினி – லோகேஷ் படம் ஒருநாளில் நடப்பது போன்ற கதைக்களத்தில் உருவாக உள்ளதாம். ஏற்கனவே லோகேஷ் இயக்கிய கைதி திரைப்படமும் ஒரே இரவில் நடக்கும் விதமாகதான் உருவாக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.