ஊத்திக்கொண்ட வந்தா ராஜாவாதான் வருவேன்: சிம்பு அப்செட்

Last Modified செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (20:08 IST)
சிம்பு நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் கடந்த 1 ஆம் தேதி வெளியானது. அதிகாலை காட்சிகள், பாலாபிஷேகம் என சிறப்பாக ரிலீஸ் ஆன இந்த படம் நெகட்டிவ் விமர்சனம் காரணமாக 90% திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது. 
 
இந்நிலையில் மீதி 10% திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்த சிம்பு படத்தை அடுத்து வெளியான சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு 2' படம் காலி செய்துவிட்டது. 
 
இப்படத்தின் வசூல் நிலவரம் தற்போது வரை தமிழகத்தில் ரூ.10.05 கோடிதானாம். இதன் மூலம் இப்படம் AAA-க்கு பிறகு சிம்புவின் திரைப்பயணத்தில் மிகப்பெரும் தோல்விப்படமாக இது அமைந்துள்ளது.
 
இதில் அதிர்ச்சி என்னவெனில் சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 படம் நல்ல வசூலை சம்பாதித்துள்ளது என்பதுதான். பெரிதும் எதிர்பார்த்த படம் வசூலில் சொதப்பியதால் சிம்பு அப்செட்டில் உள்ளாராம். 


இதில் மேலும் படிக்கவும் :