வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 5 மார்ச் 2015 (09:46 IST)

ரஜினியின் நண்பர்வீடடு விசேஷம் - சிம்பு கலந்து கொண்டார்

ரஜினியின் நெருக்கமான நண்பர் தெலுங்கு நடிகர் மோகன் பாபு. ரஜினியும், மோகன் பாபுவும் வாடா போடா நண்பர்கள். ரஜினியின் இரு மகள்களில் ஒருவரையாவது மருமகளாக்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டதாக மோகன் பாபு வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.
மோகன் பாபுவின் இருமகன்களில் விஷ்ணு மஞ்சுவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. இன்னொரு மகன் மஞ்சு மனோஜின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று ஹைதராபாத்திலுள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது. 

 
மஞ்சு மனோஜுக்கும், ப்ரணதி ரெட்டிக்கும் நடந்த இந்த திருமண நிச்சயதார்த்ததில் சிம்பு, ஆதி, தாப்ஸி போன்ற தெரிந்த முகங்களும் கலந்து கொண்டனர். சந்திரபாபு நாயுடு, ஜெகன், ரமோஜி ராவ், சிரஞ்சீவி, ராம் சரண் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
ஆனால், மோகன் பாபுவின் நெருங்கிய நண்பர் ரஜினியும் அவரது குடும்பமும் மிஸ்ஸிங். 
 
ஏன்? என்ன காரணம்?