புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (11:21 IST)

நண்பர்கள் தினத்துக்காக சிம்பு பாடிய பாடல் – இணையத்தில் வெளியானது!

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு நடிகர் சிம்பு என் நண்பனே எனத் தொடங்கும் பாடலை தயாரித்து பாடியுள்ளார்.

நடிகர் சிம்புவுக்கு தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய நண்பர் முகாம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் அவரது வீட்டிலேயே எப்போதும் நண்பர்களுடன் சேர்ந்து பொழுதை போக்குபவர். இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல்நாள் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து அவர் அந்நாளைக் கொண்டாடும் விதமாக என் நண்பனே என்ற பாடலை தயாரித்து பாடி விரைவில் வெளியிட உள்ளார்.

தற்போது இணையத்தில் இந்த பாடலின் ப்ரோமோ வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.