Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்ட சிம்பு!

Sasikala| Last Modified சனி, 29 ஜூலை 2017 (18:02 IST)
ஏற்கனவே நடிகர் சிம்பு தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருங்கள் என்று ட்விட்டர்  பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் அந்த படத்தின் இயக்கம், தயாரிப்பு ஆகியவையும் சிம்புவே பார்க்கப் போவதாகவும் தகவல்  வெளிவந்தது.

 
 
சிம்பு AAA தோல்வியால் கொஞ்சம் வருத்தத்தில் இருந்தார். தற்போது மீண்டும் களத்தில் இறங்கிவிட்டார், தன்  அடுத்தப்படத்தின் வேலைகளில் இறங்கிவிட்டார். இப்படத்தின் இசை யுவன் தானாம், விரைவில் இப்படத்தின் டைட்டிலை வெளியிடுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும், இப்படத்தை சிம்புவே இயக்கவுள்ளது கூடுதல் சிறப்பு, வல்லவன் படத்திற்கு  பிறகு சிம்பு இயக்கவிருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 
இதுமட்டுமின்றி படத்தில் பாடல்களும் இல்லை, இடைவேளையும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :