ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (16:49 IST)

சிம்பு வாங்கிய அட்வான்ஸ் தொகைக்கு வட்டிக் கேட்கும் தயாரிப்பாளர்கள்! இழுத்துக் கொண்டே செல்லும் பிரச்சனை

தயாரிப்பாளர்கள் கொடுத்த புகாரில் சிம்பு தான் வாங்கிய அட்வான்ஸ் தொகைகளை திருப்பி கொடுக்க முன்வந்துள்ளாராம்.

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முனந்தாக இப்போது சிம்புவின் முன்னாள் தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். இது சம்மந்தமான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் அவர் மேல் மேலும் சிலரும் புகாரை அளிக்க ஆரம்பித்துள்ளனரனாம்.

இயக்குனரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி தன்னுடைய வேட்டை படத்தில் நடிக்க வைக்க ஒரு கோடி ரூபாய் முன் தொகைக் கொடுத்துள்ளார். சிம்பு அந்த படத்தில் நடிக்காததால் அந்த தொகையைக் கேட்டு புகார் அளிக்க, அதே போல இது நம்ம ஆளு படத்தை விநியோகம் செய்த விதத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை போக்க தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் முரளியும் மற்றொரு புகாரை அளித்துள்ளாராம்.

இதனால் பிரச்சனைகளை முடிக்க யார் யாரிடம் எல்லாம் அட்வான்ஸ் வாங்கினாரோ அவர்களிடம் அந்த பணத்தை திருப்பித்தர சிம்பு ஒத்துக்கொண்டாராம். ஆனால் தயாரிப்பாளர்களோ இத்தனை ஆண்டுகாலமாக பணம் அவரிடம் இருந்ததற்கு வட்டிப் போட்டுக் கேட்கின்றனராம். அதனால் பிரச்சனை முழுவதுமாக முடியாமல் இழுத்துக் கொண்டுள்ளதாம்.