செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : புதன், 22 செப்டம்பர் 2021 (19:21 IST)

உலக ரோஜா தின கொண்டாட்டத்தில் நடிகர் சிலம்பரசன்!

உலக ரோஜா தின கொண்டாட்டத்தில் நடிகர் சிலம்பரசன்!
சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று உலக ரோஜா தினம் கொண்டாட்டம் நடைபெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு கலந்துகொண்டார்
 
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி உலகம் முழுவதும் உலக ரோஜா தினம் கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது
 
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுவதை அடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இது குறித்த நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
 
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிலம்பரசன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நம்பிக்கை ஊட்டினார். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன