1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Modified: திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (11:50 IST)

இன்று முதல் இது நம்ம ஆளு படப்பிடிப்பு

சிம்பு, நயன்தாரா நடிக்கும் இது நம்ம ஆளு படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடந்தது. பிறகு சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்குகிறது.
 














இது நம்ம ஆளு படத்தை பாண்டிராஜ் இயக்கி, சிம்பு சினி ஆர்ட்ஸுக்காக பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்து வருகிறார். சிம்புவின் தம்பி குறளரசன் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

முன்னாள் காதலர்கள் சிம்பு - நயன்தாரா மீண்டும் இணைந்து நடிப்பதால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இது நம்ம ஆளு படப்பிடிப்பு தொடங்கிய பின் வாலு படத்தில் சிம்பு நடிக்க சென்றதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நின்றது. பாண்டிராஜும் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தினார்.

இந்நிலையில் மீண்டும் அனைவரும் ஃப்ரீயாக, இன்று முதல் இது நம்ம ஆளு படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. சிம்பு, நயன்தாரா இதில் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.

விரைவில் படத்தின் டீஸரை வெளியிட இருப்பதாக பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.