‘நல்ல படம் பறவை போல… கண்டம் கடந்தும் நேசிக்கப்படும்’- ஜப்பானில் ரிலீஸ் ஆகும் மாநாடு குறித்து தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்த மாநாடு திரைப்படம் 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படம் அதன் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்துள்ளது. இதுபோல சிம்புவின் படம் ஒன்று அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்த படம் சமீபகாலத்தில் எதுவுமே இல்லை.
திரையரங்கு வருவாய் மூலமாக மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய முதல் சிம்பு படமாக அமைந்துள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு சிம்புவுக்கு இணையான காரணமாகவர் அமைந்தவர் எஸ் ஜே சூர்யா. தனுஷ்கோடி என்ற போலீஸ் பாத்திரத்தை ஏற்று நடித்த அவர், பேசிய வசனங்கள் எல்லாம் படம் ரிலீஸான போது வைரல் ஆகின.
இந்நிலையில் தற்போது ‘மாநாடு’ திரைப்படம் ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு அங்கு ரிலீஸாகிறது. இது சம்மந்தமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி “நல்ல படம் என்பது ஒரு அழகிய பறவை போல. கண்டம் கடந்தும் நேசிக்கப்படும். மாநாடு தற்போது ஜப்பானில் மே மாதம் வெளியாக உள்ளது. இந்த லூப் ஹோல் திரைக்கதை ஜப்பானியர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.” எனக் கூறியுள்ளார்.