செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (11:32 IST)

’வெந்து தணிந்தது காடு’ முதல் சிங்கிள் எப்போது?

சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு என்ற படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த உடன் அடுத்ததாக புரமோஷன் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளனர் 
 
வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
ஏ ஆர் ரகுமான் கம்போஸ் செய்த பாடல் ஒன்று வெளியிடும் நிலையில் தயார் நிலையில் இருப்பதாகவும் இந்த பாடலை பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிட சிம்பு விரும்புவதாகவும்  கூறப்படுகிறது
 
வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக கயடு லோஹர் என்பவர் நடித்து வருகிறார். இந்த படத்தின் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.