1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (08:10 IST)

நள்ளிரவில் வெளியான சிம்புவின் ‘பத்து தல’ பாடல்.. வீடியோ வைரல்

pathu thala
சிம்பு நடித்த பத்து தல என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நள்ளிரவு 12.06 மணிக்கு இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
நம்ம சத்தம் என்று தொடங்கும் இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார் என்பதும் ஏஆர் மற்றும் யோகி சேகர் இந்த பாடலை பாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர் ரகுமான் கம்போஸ் செய்த இந்த பாடல் முதல்முறை கேட்கும்போதே அசத்தலாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்பட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தை சூர்யா ஜோதிகா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ என்ற படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கி உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva