1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (12:40 IST)

இதனால்தான் டிவிட்டரிலிருந்து விலகினேன் - சிம்பு விளக்கம்

சமூகவலைத்தள பக்கங்களிலிருந்து விலகியுள்ளது குறித்து நடிகர் சிம்பு விளக்கம் அளித்துள்ளார்.


 

 
நடிகர் சிம்பு தனது ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில், தன்னுடைய திரைப்படங்கள் குறித்த தகவல்கள் மற்றும் பிற விஷயங்களையும் பற்றியும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார். 
 
இந்நிலையில், இதுபற்றி ஒரு ஆடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதில், அவர் சமூவலைத்தள பக்கங்களிலிருந்து விலகியதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
என் கருத்தை யாரும் தவறாக புரிந்துள்ள கொள்ளக்கூடாது என்பதற்காவே இந்த விளக்கம் அளிக்கிறேன். பொதுவாக ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் வெறுப்பு, கோபமுமே அதிகமாக பதிவு செய்யப்படுகிறது. இது எனக்கு மட்டுமில்லை. மற்ற நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் இதை சந்திக்கிறார்கள். ஒரு நடிகர் என்ன செய்தாலும், அதை நெட்டிசன்கள் குறை சொல்கிறார்கள், மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி அவதூறாக பேசுகிறார்கள். 
 
கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு என்றாலும், அந்த சுதந்திரத்தை பலரும் தவறாக பயன்படுத்துகிறார்கள். மாறாக, நாட்டின் முக்கிய பிரச்சனைகள் குறித்து அவர்கள் பேசுவதில்லை. எல்லாவற்றையும் மிகைப்படுத்துகிறார்கள். மேலும், என் பெயரில் போலி கணக்கு உருவாக்கி கருத்து தெரிவிக்கிறார்கள். 
 
இங்கே நல்லவர், கெட்டவர் என யாருமில்லை. எல்லோரும் ஒன்றுதான். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆனால், சிலர் அவர்களின் சுயநலத்திற்காக நம்மை பிரித்து வைத்திருக்கிறார்கள். எச்சரிக்கையாக இருங்கள். மற்றவர்களை காயப்படுத்த வேண்டாம். அன்பு மட்டுமே நம்மை காப்பாற்றும். இந்த எதிர்மறை சிந்தனைகளை நம் சமுதாயத்தை பாழாக்கும்” என அவர் அதில் பேசியுள்ளார்.