செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 29 ஜனவரி 2021 (16:49 IST)

அடுத்தடுத்து இரண்டு படங்களில் சிம்புவை இயக்கும் இயக்குனர்… ஆனாலும் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்!

சிம்புவை வைத்து இரண்டு படங்களை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் இயக்குனர் கௌதம் மேனன்.
 
சிம்பு உடல் எடையைக் குறைத்து இப்போது ஒழுங்காக படப்பிடிப்புக்கு வர ஆரம்பித்து படங்களை முடித்துக் கொடுக்க ஆரம்பித்துள்ளார். இனிமேல் வரிசையாக படங்களில் நடிப்பேன் எனவும் அறிவித்துள்ளார். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் சிம்புவை வைத்து வரிசையாக 3 படங்களை தயாரிக்க இருப்பதாக இருந்தது. அதில் முதல் படத்தை சிம்புவின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன் இயக்க உள்ளாராம்.

இதை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சமூகவலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படத்துக்கான அட்வான்ஸ் தொகையையும் அவர் சிம்புவின் தாய் முன்னிலையில் அவரிடம் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தைப் பற்றி மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் இரண்டு படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளாராம் ஐசரி வேலன். ஆனால் அதில் ஒன்று கூட விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் இல்லையாம். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.