Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாகுபலி பாணியில் வெளிவரும் சிம்பு படம்


Abimukatheesh| Last Updated: புதன், 19 ஏப்ரல் 2017 (18:03 IST)
சிம்பு நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்கதவன் படம் பாகுபலி போன்று வெளிவர உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 

 
சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் ‘அன்பாவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா, சானா கான் ஆகியோர் நடிக்கின்றனர். 
 
இந்த படத்தில் சிம்பு நடிக்கும் இரண்டு வேடங்களுக்கு இரண்டு டிரைலர் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது வேடத்திற்கான முன்றாவது டிரைலரை பார்க்க சிம்பு ரசிகர்கர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
 
இதைத்தொடர்ந்து சிம்பு இந்த படத்தில் நான்காவதாக ஒரு வேடத்தில் நடிப்பதாக குறிப்பிட்டார். இதனால் நாளுக்கு நாள் இந்த படம் மீதான் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் படகுழுவினர் மேலும் ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளனர்.
 
அதாவது, இந்த படத்தை பாகுபலி போல் இரண்டு பாகமாக வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். இப்படத்தின் முதல் பாகத்தை ரம்ஜான் தினத்தன்று வெளியிட உள்ளார்களாம். மேலும் படத்தின் பாடல்களை விரைவில் வெளியிட உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :