1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 2 பிப்ரவரி 2023 (08:05 IST)

பதான் வெற்றி… இயக்குனர் சித்தார்த் ஆனந்தோடு இணையும் பிரபாஸ்!

தெலுங்கு நடிகரான பிரபாஸை பாகுபலி இரண்டு பாகங்களின் வெற்றி இன்று இந்திய சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக்கியுள்ளது. அதையடுத்து அவர் நடித்த சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய இருபடங்களுமே தோல்வி படங்களாக அமைந்தன. இப்போது ஆதிபுருஷ் உள்ளிட்ட இரண்டு பேன் இந்தியா திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ரிலீஸான பதான் படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த், அடுத்து பிரபாஸ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.