1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : சனி, 2 மே 2015 (13:08 IST)

ஸ்ருதியின் தங்கைக்கோர் கீதம்

தங்கை அக்ஷரா குறித்து பேசும் போது ஸ்ருதியிடம் மகிழ்ச்சியும், பெருமையும் தாண்டவமாடுகிறது. சமீபத்தில் அக்ஷரா குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அவருக்கு அக்கா என்ற முறையில் நீங்கள் உதவி செய்வதுண்டா என்று. அதற்கு ஸ்ருதியின் பதில், சுவாரஸியம்.
என் தங்கை அக்ஷரா தைரியசாலி சுயமாக முடிவு எடுக்கும் திறமை உண்டு. சொந்த காலில் நிற்கும் தைரியமும் இருக்கிறது. நல்ல புத்திசாலியும் கூட. அக்ஷராவின் சினிமா வாழ்க்கையில் என் உதவிகள் தேவையாக இருக்கவில்லை. இப்போதைய பெண்களும் யாருடைய உதவியையும் எதிர்பார்ப்பதும் இல்லை. அவர்களே தங்களை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள்
 
 - என ஒட்டு மொத்த பெண்களையும் உயர்த்தி பேசியிருக்கிறார்.