1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2024 (11:05 IST)

தலைவர் 171 படத்தில் இணையும் கமல்ஹாசனின் மகள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

இந்த படம் 2013 ஆம் ஆண்டு வெளியான தி பர்ஜ் என்ற படத்தின் ஒரு சிறு பகுதியை தழுவிதான் லோகேஷ் இந்த படத்துக்கான திரைக்கதையை உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. ஜூன் மாதத்தில் ஷூட் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் பல மொழிகளைச் சேர்ந்த நடிகர்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தில் ரஜினியின் மகள் வேடத்தில் நடிக்க கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. ஸ்ருதிஹாசன் சமீபத்தில் லோகேஷுடன் இணைந்து ‘இனிமேல்’ என்ற பாடல் ஆல்பத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.