வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 22 மார்ச் 2021 (12:50 IST)

மன உளைச்சலில் இருந்து என்னை மீட்டது இதுதான் –ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்!

நடிகை ஸ்ருதி ஹாசன் மன உளைச்சல் மற்றும் குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டுவர கவிதைகள்தான் தனக்கு உதவியதாக தெரிவித்துள்ளார்.

கமலின் மகளான ஸ்ருதி ஹாசன் ஏழாம் அறிவு படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் லக் எனும் இந்தி படத்தில் நடித்தார். இதனால் தொடர்ந்து இந்தி படங்களில் வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். இப்போது தமிழில் லாபம் மற்றும் தெலுங்கில் கிராக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் அவரின் காதல் தோல்வியே அவரை மன உளைச்சலுக்கும் குடிப்பழக்கத்துக்கும் ஆளாக்கியதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இப்போது அவற்றில் இருந்து வெளியே வர கவிதைகள் எழுதும் பழக்கம்தான் தனக்கு உதவியதாக அவர் தெரிவித்துள்ளார்.