படப்பிடிப்புதளத்தில் பெப்சி, கோக்குக்கு தடை விதித்த முருகதாஸ்

Sasikala| Last Modified சனி, 28 ஜனவரி 2017 (17:47 IST)
ஜல்லிக்கட்டு பிரச்சனை பெப்சி, கோக் மீதான அதிருப்தியை கிளறிவிட்டுள்ளது. பல உணவங்களில் பெப்சி, கோக்குக்கு தடை  விதித்திருக்கிறார்கள். வணிகர்கள் சங்கம் மார்ச் முதல் பெப்சி, கோக் விற்பதில்லை என்று முடிவு செய்துள்ளனர்.

 
தனது படப்பிடிப்புதளத்திலும் பெப்சி, கோக்குக்கு தடை விதித்துள்ளதாக இயக்குனர் முருகதாஸ் கூறியுள்ளார். இதுபற்றி அவர்  தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது...
 
கத்தி கதை எழுதத் தொடங்கியதில் இருந்தே பெப்சி மற்றும் கோக் இரண்டையும் குடிப்பதை நிறுத்திவிட்டேன். தற்போது  என்னுடைய படப்பிடிப்பு தளத்திலும் தடை செய்யப்பட்டுள்ளது என்று அதில் கூறியுள்ளார்.
 
முருகதாஸின் இந்தத்தடையை மேலும் பல இயக்குனர்கள் பின்பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :