1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 3 ஜூன் 2021 (15:17 IST)

பாதுகாப்பான மாஸ்க் யூஸ் பண்றீங்களா? மெழுவர்த்தி டெஸ்ட் வைத்த ஷெரின்!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பேமஸ் ஆனவர் நடிகை ஷெரின். ஆனால் அவர் இதற்கு முன் சிறுவயதாக இருந்தபோதே ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். “அழகிய அசுரா, அழகிய அசுரா” என்ற பாடலில் ஷெரின் எஸ்பிரஷனில் பலரும் மயங்கியதுண்டு.
 
அதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடித்துள்ளார். தனுஷின் முதல் படமான இதில் ஷெரின், அபிநய்,ரமேஷ் கண்ணா,தலைவாசல் விஜய்,விஜயகுமார், ஷில்பா போன்ற பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்தாலும் அவரை பிரபலப்படுத்தியது என்னமோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
 
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் ஷெரின் தற்போது நாம் அணியும் மாஸ்க் பாதுக்காப்பாக உள்ளதா என்று மெழுவர்த்தி நெருப்பை அணைத்து சோதனை செய்து பார்த்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பாருங்கள் நீங்கள் அணியும் மாஸ்க் சரியானதா என்று..