1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 11 ஜூலை 2017 (17:21 IST)

சயிஷாவின் பின்னால் சுற்றும் கோடம்பாக்கம்…

வனமகன்’ சயிஷாவின் பின்னால் ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் சுற்றுவதாகக் கூறுகின்றனர்.


 

 
விஜய் இயக்கிய ‘வனமகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சயிஷா. மும்பையைச் சேர்ந்த இவர், ஹிந்தி நடிகர் திலீப் குமாரின் பேத்தி. அகில் அக்கினேனி ஜோடியாக ‘அகில்’ என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கத் தொடங்கிய சயிஷா, அஜய் தேவ்கனின் ‘ஷிவாய்’ ஹிந்திப் படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழுக்கு வந்த சயிஷா, அடுத்து விஷால், கார்த்தி நடிக்கும் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில் நடிக்கிறார்.

அடுத்தடுத்து அவரைத் தமிழில் நடிக்கவைக்க பலத்த போட்டி நடைபெறுகிறது. அவரின் அழகையும், திறமையையும் பார்த்து மட்டுமல்ல… தான் நடிக்கும் படங்களுக்கு பைனான்ஸ் செய்கிறார் சயிஷா என்று யாரோ கொளுத்திப்போட, தற்போது கோடம்பாக்கமே சயிஷாவின் பின்னால் சுற்றுகிறது.