வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (11:57 IST)

பிக்பாஸ் சீசன் 6: முதல் நபராக எலிமினேஷன் ஆன போட்டியாளர் இவர்தான்!

biggboss
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து, கமல்ஹாசன் மற்றும் பிக் பாஸ் ஆகியோருடன் விடைபெற்றுக்கொண்டு வெளியேறிவிட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று முதல் போட்டியாளராக சாந்தி எலிமினேஷன் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின
 
இந்த வாரம் 12 போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் இருந்த நிலையில் அவர்களில் சாந்தி உள்பட 4 பேரும் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாக தகவல் வெளியானது
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி குறைந்த வாக்குகள் பெற்ற சாந்தி வெளியேற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. சக போட்டியாளர்களுக்கு உப்புமா மட்டுமே சமைத்து கொண்டிருந்த சாந்தி வெளியேற்றப்பட்டதால் இனி நல்ல சாப்பாடு கிடைக்கலாம் 
 
இருப்பினும் ஒவ்வொரு சீசனிலும் ஒரு வயதான போட்டியாளர் முதல் நபராக வெளியேற்றப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran