வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (10:14 IST)

கேப்டன் பிறந்தநாளில் தொடங்கியது பொன்ராம் & சண்முகபாண்டியன் இணையும் படத்தின் ஷூட்டிங்!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’. அந்த படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குனர் பொன்ராம், அடுத்து அதே கூட்டணியில் உருவாக்கிய ரஜினிமுருகன் திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது. இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக உருவான சீமராஜா திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.

அதையடுத்து பொன் ராம் இயக்கிய எம் ஜி ஆர் மகன் மற்றும் DSP ஆகிய இரு படங்களும் படுதோல்வி படங்களாக அமைந்தன. இதனால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் இப்போது தயங்குகின்றனர். இந்நிலையில் அவர் தன்னுடைய அடுத்த படத்தை மறைந்த நடிகர் விஜய்காந்தின் மகன் சண்முக பாண்டியனை வைத்து இயக்கவுள்ளார்.

நேற்று கேப்டன் பிறந்தநாளில் இந்த படத்தின் பூஜையோடு ஷூட்டிங் தொடங்கியுள்ளது. அதில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். சண்முக பாண்டியன் நடித்துள்ள படை தலைவன் திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.