’இந்தியன் 2’ படத்தின் புதிய அப்டேட்.. ஷங்கர் வெளியிட்ட போஸ்டர்..!
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்த படம் ஒரு பான் இந்திய திரைப்படமாக வெளியாக இருப்பதை அடுத்து இந்தியா முழுவதும் தேர்தல் முடிந்த பின்னர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் சற்றுமுன் ஷங்கர் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6:00 மணிக்கு வெளியே என்று அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் 2 படப்பிடிப்பு முடிவடைந்து இந்தியன் 3 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் இந்தியன் 3 படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் படத்தின் வெற்றியை அடுத்து பல ஆண்டுகள் கழித்து கமல், சங்கர் இணைந்துள்ளதை அடுத்து இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran