வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 20 மார்ச் 2021 (16:26 IST)

இந்தியன் 2 படத்தை இயக்கமாட்டேன் என நாசூக்காக சொன்ன இயக்குனர் ஷங்கர்!

லைகா நிறுவனம் இந்தியன் 2 படத்தை முடிக்க ஷங்கரை அழைத்த போது அதற்கு அதிர்ச்சியளிக்கும் பதில் ஒன்றை சொல்லியுள்ளாராம்.

இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வந்த ஷங்கர் இப்போது வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் என்ற நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் ஐம்பதாவது திரைப்படத்தில் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படம் அவரது 15 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து ரண்வீர் சிங்கை வைத்து அந்நியன் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனால் அவர் இயக்கி வந்த இந்தியன் 2 திரைப்படம் நிலைமை என்ன ஆகும் என்றே தெரியவில்லை. இந்நிலையில் லைகா நிறுவனம் இந்த படத்தை ஜூன் மாதம் முதல் தொடங்கலாம் என அழைத்தபோது தெலுங்கு படத்தையும், இந்தி படத்தையும் இயக்கிய பின்னரே 2023 ஆம் ஆண்டுதான் இந்தியன் 2 படத்துக்கு வரமுடியும் என கூறிவிட்டாராம்.