வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 16 நவம்பர் 2016 (17:47 IST)

ஷங்கர் இயக்கத்தில் ரஜினியின் 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துகொண்டிருக்கும் பிரம்மாண்ட படம் ‘2.ஓ’. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. 

 
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என காத்திருக்கும் ரசிகர்களுக்கு தற்போது வருகிற நவம்பர் 20-ந் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதாகவும், இதற்காக பிரம்மாண்டமான விழா ஒன்றினையும் ஏற்பாடு செய்திருக்கின்றனர். 
 
இந்நிலையில் இந்த விழா லைக்கா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலும், லைக்காவின் மொபைல் ஆப் மூலமாகவும் இந்நிகழ்வை நேரடியாக காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 
இந்த விழாவில் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், அக்ஷய்குமார், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், எமி ஜாக்சன் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்தி திரையுலகின் தயாரிப்பாளரும், இயக்குனருமான கரண் ஜோகர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கயிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.